Written form
நான் ரொம்பச் சுட்டி! நீங்களும் ரொம்பச் சுட்டியா?
இவர் என் தாத்தா. தாத்தா உங்கள் பெயர் என்ன? என் பெயர் சுந்தரம். என் தாத்தா ரொம்ப நல்ல தாத்தா. இவர்கள் என் பாட்டி. பாட்டி உங்கள் பெயர் என்ன? என் பெயர் மாலா. என் பாட்டி ரொம்ப நல்ல பாட்டி. இது என் அம்மா. அம்மா பெயர் ராணி. இவர்கள்தான் இங்கே ராணி. இது என் அப்பா. அப்பா உங்கள் பெயர் என்ன? என் பெயர் குமார். அப்பா இங்கே ராஜா. அப்பாவும் அம்மாவும் ரொம்பக் கண்டிப்பு. இவன்தான் என்னுடைய தம்பி. இவன் பெயர் மூர்த்தி. மூர்த்தியும் நானும் குட்டிப் பையன்கள். மூர்த்தி ரொம்ப சுட்டிப் பையன். இவர்கள் என் அக்கா. அக்கா பெயர் மாலதி.
நான் சின்ன பையன். நானும் ரொம்ப சுட்டி பையன். என் பெயர் முருகன். உங்கள் பெயர் என்ன? நீங்களும் ரொம்ப சுட்டியா?
Spoken Form:
நான் ரொம்பச் சுட்டி! நீங்களும் ரொம்பச் சுட்டியா?
இவரு என் தாத்தா. தாத்தா உங்கள் பேரு என்ன? என் பேரு சுந்தரம். என் தாத்தா ரொம்ப நல்ல தாத்தா. இவங்க என் பாட்டி. பாட்டி உன்ங்க பேரு என்ன? என் பேரு மாலா. என் பாட்டி ரொம்ப நல்ல பாட்டி. இது என் அம்மா. அம்மா பேரு ராணி. இவங்கதான் இங்கெ ராணி. இது என் அப்பா. அப்பா உங்க பேரு என்ன? என் பேரு குமார். அப்பா இங்கெ ராஜா. அப்பாவும் அம்மாவும் ரொம்ப கண்டிப்பு. இவன்தான் என்னோட தம்பி. இவன் பேரு மூர்த்தி. மூர்த்தியும் நானும் குட்டிப் பையங்க. மூர்த்தி ரொம்ப சுட்டிப் பையன். இவங்க என் அக்கா. அக்கா பேரு மாலதி.
நான் சின்ன பையன். நானும் ரொம்ப சுட்டி பையன். என் பேரு முருகன். உங்க பேரு என்ன? நீங்களும் ரொம்ப சுட்டியா?
Line by line translation posted below the cut.
நான் ரொம்பச் சுட்டி! நீங்களும் ரொம்பச் சுட்டியா?
I am very lively. Are you also very lively?
இவர் என் தாத்தா.
This is my grandfather.
தாத்தா உங்கள் பெயர் என்ன?
Grandfather, what is your name?
என் பெயர் சுந்தரம்.
My name is Sundaram.
என் தாத்தா ரொம்ப நல்ல தாத்தா.
My grandfather is a very good grandfather.
இவர்கள் என் பாட்டி.
This is my grandmother.
பாட்டி உங்கள் பெயர் என்ன?
Grandmother, what is your name?
என் பெயர் மாலா.
My name is Maalaa.
என் பாட்டி ரொம்ப நல்ல பாட்டி.
My grandmother is a very good grandmother.
இது என் அம்மா.
This is my mother.
அம்மா பெயர் ராணி.
Mother's name is Raani.
இவர்கள்தான் இங்கே ராணி.
This here is indeed Raani. (???)
இது என் அப்பா.
This is my father.
அப்பா உங்கள் பெயர் என்ன?
Father, what is your name?
என் பெயர் குமார்.
My name is Kumaar.
அப்பா இங்கே ராஜா.
Father here Raaja. (???)
அப்பாவும் அம்மாவும் ரொம்பக் கண்டிப்பு.
Father and mother are also very strict.
இவன்தான் என்னுடைய தம்பி.
This is indeed my little brother.
இவன் பெயர் மூர்த்தி.
His name is Muurtthi.
மூர்த்தியும் நானும் குட்டிப் பையன்கள்.
Muurtthi and I are little boys.
மூர்த்தி ரொம்ப சுட்டிப் பையன்.
Muurtthi is a very lively boy.
இவர்கள் என் அக்கா.
This girl is my older sister.
அக்கா பெயர் மாலதி.
Older sister's name is Maalathi.
நான் சின்ன பையன்.
I am a little boy.
நானும் ரொம்ப சுட்டி பையன்.
I am also a very lively boy.
என் பெயர் முருகன்.
My name is Murugan.
உங்கள் பெயர் என்ன? நீங்களும் ரொம்ப சுட்டியா?
What is your name? Are you also very lively?
0 comments:
Post a Comment