குங் ஃபூ பயிலும் பிக்குணிகள்
நேபாளத்தின் பௌத்த மடம் ஒன்றில் பிக்குணிகளுக்கு குங் ஃபூ தற்காப்புக் கலையில் பயிற்சி தரப்படுகிறது.
- குங் ஃபூ Kung Fu
- பயில் : practice; habit; signal; trained and attain skill
- பிக்குணி : பெளத்த பிட்சுணி Buddhist female ascetic
- பௌத்தம் Buddhism (புத்தர்= Buddha)
- மடம் monastery, temple
- தற்காப்பு self-defense
- கலை art
- பயிற்சி : training
- தரப்படுகிறது is given
குழந்தைகளை பெற்று வளர்ப்பது, வயல்களில் வேலை செய்வது, பொதுவாக கல்வி பெறுவதிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவது என்று பாரம்பரியமாகவே ஒரு கஷ்டமான வாழ்க்கையைத்தான் கடுமையான குளிர் நிலவும் இமாலய மலைப் பகுதிகளில் பெண்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
- குழந்தை child
-
பெற்று வளர்க்க , to bring forth & bring up a child. - வயல் field
- வேலை work
- செய் do
- கல்வி study, practice
நேபாளத்தில் புத்த மடாலாயங்களில் பெண் துறவிகளாக அதாவது பொளத்த பிக்குணிகளாக ஆவது என்பது ஒன்றும் அவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கி விடுவதில்லை.
ஏனென்றால் ஆண் பிக்குகளுக்கு பணிவிடை செய்யும் பணிப் பெண்களாகவே பிக்குணிகள் பொதுவாகக் கருதப்படுகிறார்கள்.
ஆனால் இதை ஒரு புத்த மதப் பிரிவு மாற்ற முயன்று கொண்டிருக்கிறது.
துருக்பா மடாலயம்
800 ஆண்டுகளாக இருந்து வரும் இந்த துருக்பா பிரிவைச் சேர்ந்த இந்த மடாலயத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக பிக்குணிகளுக்கு குங் ஃபூ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
"குங் ஃபூ பயில்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. இந்த பயிற்சி எமது தியானப் பயிற்சிக்கும் உதவுகிறது" என கொஞ்சுக் என்ற 17 வயது பெண் துறவி தெரிவித்தார்.
வியட்நாமிய குங் ஃபூ பயிற்சியாளர் இளம் பெண் பிக்குணிகளுக்கு பயிற்சி தருகிறார்.
பௌத்த மடாலயம் நடத்தும் ஆங்கிலப் பெண்
30 ஆண்டுகளுக்கும் முன்னர் துருக்பா புத்தமதப் பிரிவில் சேர்ந்து ஒரு பிக்குணியான ஜெட் சும்னர் என்ற ஆங்கிலப் பெண்மணி, இப்போது இமாலயப் பகுதியில் அவரே ஒரு பிக்குணிகள் மடாலயத்தை நடத்துகிறார்.
இந்த மடாலயம் ஒரு நவீனமயமானதாக, நன்றாக வசதிகள் படைத்ததாக அழகாக இருக்கிறது என்பது முதல் விஷயம்.
வழக்கத்துக்கு மாறாக, இந்த பிக்குணிகள் இங்கு பொளத்த பிக்குகள் செய்யும் எல்லா சடங்குகளையும் செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் குங் ஃபூவும் கற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.
இரண்டாவது வருடாந்திர துருக்பா மாநாட்டுக்காக அங்கு வந்த நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் முன்பு பிக்குணிகள் தமது குங் ஃபூ திறமையை வெளிப்படுத்தினர்.
0 comments:
Post a Comment