Sunday, April 25, 2010

Tamil Reading: Tamil Nadu Dinosaur Eggs

Newspaper article from the BBC.
Luckily the BBC English and BBC Tamil articles are very similar in content which helped me figure out a few parts. The article dates to October 2009.  
When we look at more complicated sentences, the less there is going to be a perfect match in translations.  Here I have tried to maintain the kinds of word choice in the Tamil while still rephrasing so that it flows in English. 

தமிழ்நாட்டில் டைனோசோர் முட்டை


  1. தமிழ்நாட்டில் அரியலூர் அருகே உள்ள கிராமத்தில் கல்லாகிய நூற்றுக்கணக்கான டைனோசோர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    In Tamil Nadu near Ariyalur village hundreds of fossilized dinosaur eggs were found. 

  2. ஆற்றுப் படுகை அருகே நிலவியல் விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தபோது, குவியல் குவியலான கல்லாகிய முட்டைகள் மண்ணாலான கூடுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    In land adjacent to a river bed, scientists discovered heaps and heaps of fossilized dinosaur eggs in nests.

  3. கல்லாகிய முட்டைகள் பார்ப்பதற்கு டினோசோர் முட்டைகள் போல இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    The fossilized eggs of young of dinosaurs have been studied.

  4. இவை ஆறு கோடியே ஐம்பது லட்சம் ஆண்டுகள் பழமையானவையாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    It is informed that these lived 65 million years ago (6 crore + 50 lakhs)

  5. ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து அளவில் இருக்கின்ற இந்த முட்டைகள் சொரோபோட்ஸ் எனப்படும் கழுத்து நீண்ட தாவர உண்ணி டைனோசோர் வகையை சேர்ந்தவை என்று ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

    Everyone is the size/shape of a football, these eggs are from animals known as Sauropods, a plant eating variety of dinosaur with long necks announced the members of the research group.

  6. டைனொசோர் இனம் ஏன் அழிந்தது என்பது பற்றி கூடுதல் விபரம் அறிய இக்கண்டுபிடிப்பு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

    It is hoped that this will provide additional details to learn why the dinosaur race was destroyed, say the research personnel. 

  7. இந்த முட்டைகளை கண்டுபிடித்த ஆய்வாளர் குழுவைச் சேர்ந்த பெரியார் பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறையின் உதவிப் பேராசிரியர் முத்து வைரவசாமி ராம்குமார் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

    This says something about being able to listen to the recording of the interview with the scientist...

Related posts:











0 comments:

Post a Comment